2019ஆம் ஆண்டு தொடக்கம் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் செயலாளராகக் கடமையாற்றி இப்பிரதேசத்திற்கு அளப்பரிய சேவையாற்றி, தற்போது முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (அதி சிறப்புத்தரம்) பரீட்சையில் சித்தியெய்தி, கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபையின் செயலாளராகப் பதவிவுயர்வு பெற்றுச் செல்லும் திரு. செ.செல்வகுமார் அவர்களுக்கான பிரிவுபசார நிகழ்வானது 2024.02.19 அன்று சபை உத்தியோகத்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக இடம்பெற்றது