எமது சபையினால் வழங்கப்படுகின்ற சேவைகளில் சுகாதார சேவை முக்கியமானதாகவும் அத்தியாவசியமானதாகவும் காணப்படுகின்றது.மாந்தை கிழக்கு சுகாதார வைத்திய அதிகார மணிமனை எமது சபையுடன் இணைந்து எமது பிரதேச மக்களுக்கு சுகாதார சேவைகளை சிறப்பாக வழங்கி வருகின்றன.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவுரைக்கேட்ப மாந்தை கிழக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதி மக்களுக்கு வழங்கப்படுகின்ற சுகாதார சேவைகளை எமது சபையுடன் இணைந்து மாந்தை கிழக்கு சுகாதார வைத்திய பணிமனை மேலும் மேம்பாடு அடையச்செய்வதற்காக எமது சபை செயலாளர் திருமதி.பா.சிவதர்சினி தலைமையில் 20.03.2024 இன்று நண்பகல் 1.00 மணியளவில் மாந்தை கிழக்கு பிரதேச சபை பொதுநோக்கு மண்டபத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில்
1.உணவு கையாள்பவர்களுக்கான மருத்துவ அடையாள அட்டை வழங்கல்.
2.வளர்ப்பு நாய்களை பதிவு செய்தல்.
3.நாய்களுக்கான தடுப்பூசியேற்றல்.
4.கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்தல்.
5.வீதிகளில் மாடுகளை கட்டுப்படுத்தல்
6.கட்டட விண்ணப்பம்,வியாபார உரிமம் தொடர்பான விடயங்கள் ஆகியவையும் எமது பிரதேச மக்களின் சுகாதார சேவை அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் எமது சபை செயலாளர்,சுகாதார வைத்திய அதிகாரி,பிரதேச வைத்தியர்,எமது சபை வருமான அதிகாரிகள், எமது சபை உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.


