எமது சபையினுடைய பிரதேசத்தில் வன்னிவிளாங்குளம் கிராமமும் ஒன்றாகும்.
எமது சபையால் வழங்கப்படுகின்ற சேவைகளில் ஒன்றாக மயான சேவை காணப்படுகின்றது.எமது வன்னிவிளாங்குளம் பொது மயானத்தை பராமரிப்பதற்கும் மயான சேவை பொது மக்களுக்கு நேர்த்தியாக வழங்குவதற்கும் மயானத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுத்துச்செல்வதற்கும் எமது சபை செயலாளர் திருமதி.பா.சிவதர்சினி அவர்களுடைய தலைமையில் வன்னிவிளாங்குளம் பொதுமாயான பராமரிப்பு அமைப்பு புதிதாக தெரிவு செய்வதற்கான கூட்டம் 12.03.2024 ஆம் திகதி மு.ப 11.30 மணிக்கு வன்னி விளாங்குளம் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வன்னிவிளாங்குளம் பொதுமாயான பராமரிப்பு அமைப்பு புதிதாக தெரிவு செய்யப்பட்டதுடன்
மயானத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதில் எமது சபை செயலாளர் , வன்னிவிளாங்குள வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர்,கிராம சேவகர்,சனசமூக அமைப்பினர் மற்றும் வன்னிவிளாங்குள பொது மக்கள் கலந்துகொண்டனர்.

