





எமது மாந்தை கிழக்கு பிரதேச முன்பள்ளியில் எமது சபை செயலாளர் தலைமையில் சர்வதேச பூச்சிய கழிவு தினம் மார்ச் – 30 இனை முன்னிட்டு சூழல் மாசுபடுத்தலை ஏற்படுத்தும் பாலித்தீன்,பிளாஸ்டிக் மற்றும் கழிவு பொருட்களை எமது முன்பள்ளி மாணவர்கள் கழிவுப் பொருட்களை மீள்சுழற்சிக்கு உட்படுத்தி அவற்றை கலை,கைவினை பொருட்களாக செய்து அதனை 22.03.2024 திகதி காலை 10.00 மணிக்கு எமது சபை முன்பள்ளியில் கண்காட்சி மூலம் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சுற்றுச்சூழலை நாம் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்று விழிப்புணர்வு செய்யப்பட்டதுடன்
கழிவுப்பொருட்களை சிறப்பாக கலை,கைவினைப் பொருட்களாக மாற்றிய மாணவர்களுக்கு பராட்டும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் எமது சபை செயலாளர்,உத்தியோகத்தர்கள்,
ஊழியர்கள்,முன்பள்ளி ஆசிரியர்,மாணவர்கள்,மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.