எமது சபை செயலாளர் திருமதி.பா.சிவதர்சினி தலைமையில் சர்வதேச பூச்சிய கழிவு தினம் மார்ச் – 30 இனை முன்னிட்டு எமது பிரதேச பாடசாலை மாணவர்கள் சூழல் மாசுபடுத்தலை ஏற்படுத்தும் பொலித்தீன்,பிளாஸ்டிக் மற்றும் கழிவு பொருட்களை முறையாக அகற்றி சூழலை எவ்வாறு பாதுகாத்தல், கழிவுப்பொருட்களை நிறப்பாகுபாட்டிற்கேற்ப கழிவுப்பெட்டிக்குள் தரம்பிரித்து அகற்றுதல்,கழிவுப்பொருட்களை மீள்சுழற்சிக்கு உட்படுத்தி அவற்றை கலை,கைவினை பொருட்களாக செய்தல்,திண்மக்கழிவுப்பொருட்களில் இருந்து எவ்வாறு சேதனப்பசளை தயாரித்தல் என்பது தொடர்பாக விழிப்புணர்வு 25.03.2024 நட்டாங்கண்டல் மற்றும் விநாயகபுரம் அ.த.க பாடசாலைகளில் இன்று செய்யப்பட்டது.
இவ்விழிப்புணர்வில் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பான துண்டுப்பிரசுரங்களும் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
