வியாபார நிலையங்கள் வியாபார உரிமம் பெற்று பொருட்களை நுகர்வோருக்கு விற்பனை செய்ய வேண்டும். மாறாக வியாபார உரிமம் இல்லாது பொருட்களை விற்பனை செய்தல் சட்டப்படி குற்றமாகும்.
எமது பிரதேச மக்களின் நலன் கருதி எமது சபை செயலாளர் திருமதி.பா.சிவதர்சினி தலைமையில்
பாலிநகர் வட்டாரத்தில் உள்ள எமது பொது நூலகத்தில் வியாபார உரிமம் வழங்குதல் தொடர்பான நடமாடும் சேவை 27/03/2024 இன்று காலை 10.00 மணிக்கு எமது சபை வருமான அதிகாரிகள் , வருமான உத்தியோகத்தர்கள் , வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்டது.
இதில் 2024 ஆம் ஆண்டுக்கான வியாபார உரிமம் இல்லாத வியாபார நிலையங்களுக்கு வியாபார உரிமம் தொடர்பான படிவங்கள் வழங்கப்பட்டு அவற்றை பூரணப்படுத்தப்பட்டு வியாபார உரிமத்துக்கான கட்டணங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு வியாபார உரிமம் வழங்கப்பட்டது.
மேலும் வியாபார நிலையங்களுக்கான வியாபார உரிமம் தொடர்பான அறிவுறுத்தல்கள் எமது வருமான அதிகாரிகளால் வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
