எமது பிரதேச சபையில் பிரதான முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக திரு.T.கொலின்ஸ் ரூபன் அவர்கள் கடமையை பொறுப்பேற்று கடந்த 4 வருடங்களுக்கு மேலாக தனது ஆளுமை மிக்க தலைமைத்துவத்தை கையாண்டு ,எமது பிரதேச மக்களுக்கு சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
இன்றுடன் எமது பிரதேச சபை பிரதான முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திரு.T.கொலின்ஸ் ரூபன் அவர்கள் இடமாற்றம் பெற்று மாங்குளம் நீர்பாசன திணைக்களத்துக்கு மக்கள் பணி மேற்கொள்ளவதற்கு செல்கின்றார். எமது பிரதேச சபைக்கும் பிரதேச மக்களுக்கும் எமது பிரதான முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திரு.T.கொலின்ஸ் ரூபன் அவர்கள் வழங்கிய சேவைக்கு நன்றி தெரிவிப்பதோடு மேலும் அவர் பதவி உயர்வு பெற்று மக்கள்
பணியை சிறப்பாக வழங்குவதற்கு மனம்நிறைந்த வாழ்த்துக்களையும் எமது சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் தெரிவித்துகொள்கின்றோம்.






