எம்மால் வழங்கப்படுகின்ற நலன்புரி ச்சேவைைளில் ஒன்றாக நூலக சேவை காணப்படுகின்றது. எமது பிரதேச மாணவர்களின் அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கில் எமது சபையால் 3 நூலகங்கள் அமைக்கப்பட்டது.அதில் ஒன்றாக விநாயகபுரம் பொது நூலகம் காணப்படுகின்றது.இது விநாயகபுரம் வட்டாரத்தில் அமையப்பெற்றுள்ளது.
இந்நூலகம் பொன்னகர்,பூவரசன்குளம், விநாயகபுரம் ஆகிய மூன்று கிராம மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
2022 ஆம் ஆண்டு உலக வங்கியின் உள்ளூர் அபிவிருத்தி உதவிதிட்டத்தின்(Local Development Support Project – LDSP)மூலம் இந்நூலகம் புதிதாக அமைக்கப்பட்டது.தற்போது இந்நூலகத்தினை பாவனை செய்யும் மாணவர்கள்,வாசகர்கள்,மக்களின் பாதுகாப்பு,சுகாதார நலன் கருதி மேலும் நூலகத்தினை மலசலகூடம்,குடிநீர்,பாதுகாப்பு நடவடிக்கைகள் மீண்டும் உலக வங்கியின்
உள்ளூர் அபிவிருத்தி உதவிதிட்டத்தின்(Local Development Support Project – 2024 ) மூலம்
எமது சபை செயலாளரின் நல் வழிகாட்டலின் கீழ் திட்டமிடப்பட்டு கேள்வி கோரல் முறை மூலம் ஒப்பந்ததாரர்கள் தெரிவுசெய்யப்பட்டு 11.03.2024 ஆம் திகதி முதல் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகின்றன.
