வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா – மாந்தை கிழக்கு பிரதேச சபை முன்பள்ளி – 2024

எமது சபையால் வழங்கப்படுகின்ற நலன்புரிச்சேவையில் மாணவர்களின் கல்வியை விருத்தி செய்யும் முன்பள்ளி சேவையும் ஒன்றாகும். எமது பிரதேச மாணவர்களின் கல்வித்திறன் மட்டுமன்றி விளையாட்டு திறமையை வளர்க்கும் நோக்கில் எமது சபை செயலாளர் திருமதி பா.சிவதர்சினி அவர்கள் தலைமையில் எமது மாந்தை கிழக்கு பிரதேச சபை முன்பள்ளியின் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா 20.06.2024 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
வரவேற்புநடனம்,மங்களவிளக்கேற்றி, இறைவணக்கம்,கொடியேற்றல்,ஒலிம்பிக்சுடரேற்றல், சத்தியப்பிரமாணம் ஆகிய நிகழ்வுகளுடன் ஆரம்பிக்கப்பட்டு மாணவர்கள் விளையாட்டு,மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வுகளுடன் நிறைவுசெய்யப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.மா.ஜெகநாதன்,(அதிபர், மு/பாண்டியன்குளம் ஆரம்பப்பாடசாலை) அவர்களும் சிறப்பு விருந்தினராக தே.கார்த்திகன் (செயலாளர்,துணுக்காய் பிரதேச சபை) அவர்களும் கௌரவ விருந்தினராக திரு.க.சுஜாந்த் (கிராம சேவை உத்தியோகத்தர்,பாண்டியன்குளம்) அவர்களும் மாந்தை கிழக்கு பிரதேச சபை உத்தியோகத்தர்கள்,பணியாளர்கள், முன்பள்ளி மாணவர்கள்,முன்பள்ளி ஆசிரியர்கள்,பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *