எமது சபையால் வழங்கப்படுகின்ற நலன்புரிச்சேவையில் மாணவர்களின் கல்வியை விருத்தி செய்யும் முன்பள்ளி சேவையும் ஒன்றாகும். எமது பிரதேச மாணவர்களின் கல்வித்திறன் மட்டுமன்றி விளையாட்டு திறமையை வளர்க்கும் நோக்கில் எமது சபையால் வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியை நடாத்திவருவது குறிப்பிடத்தக்கது.
2024 ஆண்டிக்குரிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியை நடாத்துவதன் பொருட்டு எமது சபையினுடைய செயலாளர் திருமதி.பா.சிவதர்சினி தலைமையில் எமது கனரக வாகனத்தின் மூலம் சபை ஊழியர்களை பயன்படுத்தி மாந்தை கிழக்கு பிரதேச சபை முன்பள்ளி மைதானம் 18.06.2024 இன்று துப்பரவு செய்யப்பட்டது.



