எமது பிரதேசத்தில் நட்டாங்கண்டல் அம்மன் ஆலயம் அமையப்பெற்றுள்ளது. இவ் ஆலயத்தில் நடைபெறும் வருடாந்த மகோற்சவத்திற்கு அதிகளவு மக்கள் வருகை தந்து இறை தரிசனம் பெறுகின்றனர். நட்டாங்கண்டல் அம்மன் ஆலய 2024 ஆம் ஆண்டின் மகோற்சம் நடைபெறவுள்ளதனால் ஆலயத்திற்கு வருகை தரும் மக்களின் உடல் ஆரோக்கியத்தை பேணும் நோக்கில் குடிநீர் பிரச்சினையை நிவர்த்தி செய்ய மக்களின் கோரிக்கைக்கு அமைய எமது சபை செயலாளர் திருமதி.பா.சிவதர்சினி அவர்களின் வழிகாட்டலின் கீழ் எமது சபை ஊழியர்களினால் நட்டாங்கண்டல் அம்மன் ஆலய பொதுக்கிணறு 02.07.2024 ஆம் திகதி துப்பரவு செய்யப்பட்டது.


