எமது சபையின் கீழ் 8 வாரங்கள், 15 கிராமசேவகர் பிரிவுகள் அமையப்பெற்றுள்ளன. எமது சபை செயலாளர் தலைமையில் எமது பிரதேசத்தில் அபிவிருத்தி அடைந்த கிராமமான பாண்டியன்குளம்,செல்வபுரம் ஆகிய கிராமங்களை ஆதனவரி அறவீடு செய்வதற்கு தெரிவுசெய்யப்பட்டு அவை இலங்கை வர்த்தகமானியில் பிரசுரிக்கப்பட்டது.
வர்த்தக மானியில் பிரசுரிக்கப்பட்ட இடங்களில் ஆதனவரிசை அறவீடு செய்வதற்கு முன்னாயத்த செயற்பாடாக எமது சபை கள உத்தியோகத்தர்களால் ஆதனவரி அறவீடு செய்யப்படவுள்ள இடங்களை நேரடியாக சென்று பார்வையிட்டு இடங்கள் அனைத்தும் அடையாளப்படுத்தப்பட்டு தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.
எமது கள உத்தியோகத்தர்களால் இடங்கள் அனைத்தும் அடையாளப்படுத்தப்பட்ட பின்பு
ஆதனவரிக்குரிய இடங்கள் valivation செய்யப்பட்டு அதன் பின்பு எமது சபையால் ஆதனவரி அறவீடு செய்யப்படும்.(05.07.2024)






