2024 ஆம் ஆண்டு உள்ளூர் அபிவிருத்தி உதவி திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வேலைகள் தொடர்பான முன்னேற்றக் கலந்துரையாடல் எமது சபைச் செயலாளர் திருமதி பா.சிவதர்சினி அவர்கள் தலைமையில் மாந்தை கிழக்கு பிரதேச சபை பொதுநோக்கு மண்டபத்தில் 31.07.2024 ஆம் திகதி காலை 10 மணிக்கு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எமது சபைச் செயலாளர், உள்ளூர் அபிவிருத்தி உதவி திட்டத்தின் உதவி திட்டப் பணிப்பாளர் (பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர்), மற்றும் உள்ளூர் அபிவிருத்தி உதவி திட்ட மாவட்ட பொறியாளர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர், படவரைஞர் , தொழில்நுட்ப உத்தியோத்தர்கள், விடய உத்தியோகத்தர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.




