கல்வி என்பது முறை வழிப்படுத்தப்பட்ட நிலையில் முனைப்பாக செயல்படக்கூடிய சரியான வயது எல்லைக்குள் வழங்கப்படவேண்டியதொரு நுண்மதி நிலையாகும். குழந்தைகளின் உடல், உள, சமூகவியல் ரீதியான வளர்ச்சிப் பரிணாமங்களில் முன்பள்ளிகள் முக்கிய பங்காற்றுவதுடன் தேசிய, சர்வதேச ரீதியிலும் இதன் தேவை இன்றியமையாததாகவும் காணப்படுகின்றது.
எமது சபை சேவைகளில் ஒன்றாக மாந்தை கிழக்கு பிரதேச முன்பள்ளி சேவை காணப்படுகின்றது. இந்த வகையில் எமது பிரதேச குழந்தைகளின் கல்வி அறிவு மட்டுமல்லாது அவர்களின் உடல்,உள,சமூகவியல் ரீதியான அபிவிருத்தியினை மேற்கொள்வதற்கு எமது சபை செயலாளர் திருமதி. பா.சிவதர்ஷினி அவர்கள் தலைமையில் பிரதான முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி.ல.ருஜினா அவர்களினால் எமது சபையினுடைய முன்பள்ளியில் மாதாந்த கூட்டம் 08.08.2024 ஆம் திகதி காலை 10 மணிக்கு நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் முன்பள்ளி ஆசிரியர், முன்பள்ளி மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் முன்பள்ளியின் பாதுகாப்பு கருதி முன்பள்ளி எல்லப்பகுதி பெற்றோர்களின் பங்களிப்பில் வேலி அமைக்கப்பட்டதுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் முன்பள்ளி மாணவர்களின் கல்வி அபிவிருத்திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.


