மாந்தை கிழக்கு பிரதேச சபையின் 2025 ஆம் ஆண்டு பாதீடு தயாரிப்பதற்கு எமது சபை செயலாளர் திருமதி பா.சிவதர்சினி அவர்கள் தலைமையில் அம்பாள்புரம் கிராம சேவகர் பிரிவு மக்களுடன் 09/08/2024 ஆம் திகதி காலை 11.00 மணிக்கு அம்பாள்புரம் மீனவர் கூட்டுறவுச்சங்க பொது மண்டபம் கலந்துரையாடல் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலை எமது சபையின் பிரதான முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி .ல.ருஜினா அவர்கள் நடத்தினார். இக்கூட்டத்தில் அம்பாள்புர சன சமூக நிலைய நிர்வாகிகள், அம்பாள்புரம் மீனவர் கூட்டுறவுச்சங்கம், மாந்தை கிழக்கு பிரதேச சபை வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர், மாந்தை கிழக்கு பிரதேச சபை சனசமூக நிலைய உத்தியோகத்தர், மாந்தை கிழக்கு பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், அம்பாள்புர கிராம சேவகர் பிரிவு மக்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் 2025 ஆம் ஆண்டுக்குரிய பாதீட்டில் சேர்க்கப்படவுள்ள வேலைகள் முன்மொழிபட்டு அவை தரவரிசைப்படுத்தப்பட்டது.
அத்துடன் உள்ளூராட்சி மன்றங்களுக்கு சொந்தமான மயானத்தில் இறுதிக் கிரியை மேற்கொள்ளும் போது தலா 1000.00 ரூபா அறவிடப்படும். அத்தோடு இதற்கு பொறுப்பாக சனசமூக நிலையங்கள் செயற்படும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
.





