எமது சபையால் வழங்கப்படுகின்ற நலன்புரிச்சேவைகளில் ஒன்றாக மாந்தை கிழக்கு பிரதேச சபை முன்பள்ளி அமையப்பெற்றுள்ளது.
எமது பிரதேச மாணவர்களின் கல்வி அறிவை மட்டும் விருத்தி செய்யாது அவர்களின் கலை,விளையாட்டு திறன்களை விருத்தி செய்வதாகவும் மாந்தை கிழக்கு பிரதேச சபை முன்பள்ளி காணப்படுகின்றது.
2024ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளூர் அபிவிருத்தி உதவிதிட்டத்தின்(Local Development Support Project) ஊடாக எமது பிரதேச சபை செயலாளர் தலைமையில் மாந்தை கிழக்கு பிரதேச முன்பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் கேள்வி அறிவித்தல் முறை மூலம் கொள்வனவு செய்யப்பட்டு பொருத்தப்பட்டு தற்போது மாணவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.







