திண்மக்கழிவகற்றல் சேவை 15.08.2024

உலகளாவிய ரீதியில் இன்று நகரங்கள் மட்டுமல்லாது கிராமங்களும் எதிர் நோக்குன்ற முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக சூழல் மாசடைதல் காணப்படுகின்றது. இதற்கு கழிவுகள் முறையாக அகற்றப்படாமை,கழிவுகள் மீீீள் சுழற்சிக்கு உட்படுத்தாததுமே ஆகும். 2016 ஆம் ஆண்டு வருடாந்த திண்மக்கழிவு உருவாக்கமானது 2.01 பில்லியன் தொன்னாக காணப்படுவதுடன் ஒருமனிதன் ஒரு நாளைக்கு 0.74 Kg திண்மக்கழிவினை உருவாக்குகிறான்.இதனோடு 2050 ஆம் ஆண்டு 3.40 பில்லியன் தொன்னாக திண்மக்கழிவுகள் அதிகரிக்குமென்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.(World Bank Report -2020 )
எமது பிரதேச சபை 494 சதுரக்கிலோமீற்றர் பரப்பளவையும் 8 வட்டாரங்களையும் 15 கிராம சேவகர் பிரிவுகளையும் 10222 சனத்தொகையையும் கொண்டமைந்துள்ளது. எமது இப்பிரதேச மக்களின் உடல், உள நலன்கருதியும் சூழல் மாசுபடுதலை தவிர்க்கும் நோக்குடன் எமது சபையால் திண்மக்கழிவு சேகரித்தல் சேவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எமது சபையின் செயலாளர் திருமதி பா.சிவதர்சினி அவர்கள் நல் வழிகாட்டலில் எமது பணியாளர்கள், வாகனங்கள் மூலம் 15.08.2024 ஆம் திகதி கல்வாரி பூங்கா,
வன்னிவிளாங்கும், அம்பாள் புரம், வடகாடு, ஓட்டறுத்த குளம், கொல்லவிளாங்குளம், மற்றும் பாலையடி ஆகிய இடங்கள் துப்பரவு செய்யப்பட்டு கழிவகற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *