2024 ஆம் ஆண்டின் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மாணவர்களிடையே வாசிப்பு திறனை அதிகரிக்கும் நோக்குடனும் மாணவர்களின் திறனை வளர்க்கும் நோக்குடனும் மாணவர்களுக்கு
சித்திரப்போட்டி
பேச்சுப்போட்டி
கவிதைப் போட்டி
கட்டுரைப்போட்டி
வினாடிவினாப்போட்டி
ஆகிய போட்டிகள் நடாத்தப்பட்டன.
குறித்த போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் விழா எமது சபைச்செயலாளர் திருமதி.பா.சிவதர்சினி அவர்களின் தலைமையில் இன்று (06.11.2024) காலை 9.30 மணிக்கு விருந்தினர்களை வரவேற்று மங்கள விளக்கேற்றி இறை வணக்கத்துடன் ஆரம்பமாகி
வரவேற்புரை, தலைமையுரை, சிறப்பு விருந்தினர் உரை, கலை நிகழ்வுகள், பரிசில்கள் வழங்கும் நிகழ்வு என்பன நடைபெற்று இறுதியாக நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.











