எமது சபையால் மக்களுக்கு வழங்குகின்ற சேவைகளில் ஒன்றாக அனர்த்த முகாமைத்துவம் காணப்படுகிறது. பாண்டியன்குளம் 50 வீட்டுத்திட்ட 9ஆம் ஒழுங்கையில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மரம் ஒன்று முறிந்து விழுந்து மக்களின் போக்குரத்தினை இடை நிறுத்துவதாகவும் மக்களின் அன்றாட வாழ்கைச்செயற்பாட்டை தடைசெய்ததாகவும் காணப்பட்டது.
குறித்த பிரதேச மக்களின் கோரிக்கைக்கு அமைவாக மக்கள் போக்குவரத்தை பாதுகாப்பாகவும் எளிதாகவும் மேற்கொள்ள எமது சபை செயலாளர் திருமதி.பா.சிவதர்சினி அவர்களின் நல் வழிகாட்டலில் எமது சபை ஊழியர்களினால் பாண்டியன்குளம் 50 வீட்டுத்திட்ட 9ஆம் ஒழுங்கையில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய முறிந்து விழுந்த மரம் இன்று (23.11.2024 திகதி) அகற்றப்பட்டது.





