எமது பிரதேச மக்களின் போக்குவரத்து சிறப்பாக அமையும் சந்தர்ப்பத்தில் எமது பிரதேச அபிவிருத்தியும் வளர்ச்சிப்பாதையினை அடையும்.எமது மக்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் போக்குவரத்து மேற்கொள்ள வீதி சிறப்பாக அமைத்துகொடுப்பதுடன் அவற்றை பராமரிப்பதும் எமது சேவைகளில் முக்கியமான ஒன்றாகும்.
எமது பிரதேச மக்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் போக்குவரத்தினை மேற்கொள்ள எமது வீதிகளை சிறப்பாக பராமரிப்பதன் பொருட்டு எமது சபை செயலாளர் திருமதி.பா.சிவதர்சினி அவர்களின் நல் வழிகாட்டலின் கீழ் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை – 2024 (PSDG-2024) நிதி 2 மில்லியன் செலவில் எமது பிரதேச சபை வீதி 248 இல்
பாண்டியன்குளம் 1ஆம் வீதி மற்றும் 2ஆம் ஒழுங்கை வீதிகள் புனரமைக்கப்பட திட்டமிடப்பட்டு கேள்வி கோரல் முறை மூலம் ஒப்பந்ததாரர்கள் தெரிவுசெய்யப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.




