எமது சபையின் 2025 ஆம் ஆண்டுக்குரிய பாதீடு தயாரித்தல் தொடர்பாக எமது சபைச்செயலாளர் திருமதி.பா.சிவதர்சினி தலைமையில் வட்டார ரீதியாக மக்கள் மற்றும் அமைப்புகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு திட்டங்கள் பல முன்மொழியப்பட்டு அவற்றை முன்னுரிமைப்படுத்தப்பட்டும் வருகின்றன.
இந்த வகையில் 08.10.2024,10.10.2024ஆம் திகதிகளில் பாதீடு தொடர்பான கலந்துரையாடல் காலை 10.00 மணியளவில் நட்டாங்கண்டல் வட்டாரத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் எமது சபைச்செயலாளர்,பிரதான முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்,பொது மக்கள்,சமூக அமைப்பினர்,சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர் கலந்து கொண்டனர்.



