ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியில் விநாயகபுரம் வட்டார சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் பொருத்துதல்

எமது சபை எமது பிரதேச மாணவர்களின் கல்வி அறிவை மட்டும் விருத்தி செய்யாது அவர்களின் கலை,விளையாட்டு திறன்களை விருத்தி செய்வதாகவும் காணப்படுகின்றது.
2024ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளூர் அபிவிருத்தி உதவிதிட்டத்தின்(Local Development Support Project) ஊடாக எமது பிரதேச சபை செயலாளர் திருமதி.பா.சிவதர்சினி அவர்களின் தலைமையிலும் நல் வழிகாட்டலிலும் விநாயகபுரம் வட்டாரத்திலுள்ள சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் கேள்வி அறிவித்தல் முறை மூலம் கொள்வனவு செய்யப்பட்டு எமது விநாயகபுரம் பொது நூலகத்தில் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது விநாயகபுரம், பூவரசன்குளம், பொன்னகர் ஆகிய கிராமத்திலுள்ள சிறுவர்களால் பயன்படுத்தப்பட்டு அப்பிரதேச சிறுவர்களின் விளையாட்டு திறன் மேம்படுத்தப்படுகிறது.
மாந்தை கிழக்கு பிரதேச சபை
பாண்டியன்குளம் நட்டாங்கண்டல்
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *