பிரதேசசபை கடைத்தொகுதிகளை வாடகை அடிப்படையில் வழங்குவதற்கான கேள்வி அறிவித்தல் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் கொல்லவிளாங்குளம் சந்தைப் பகுதியில் உள்ளூர் அபிவிருத்தி உதவித்திட்ட நிதியில் (LDSP) அமைக்கப்பட்ட 3 கடைத்தொகுதிகள் மற்றும் பாலிநகர் கடைத் தொகுதியில் 3வது கடை மட்டும் 10.12.2024 ஆம் திகதிய உதயன் பத்திரிகையில் விளம்பரப்படுத்தியுள்ளது.
கீழ்குறிப்பிடப்படும் அட்டவணையில் விபரிக்கப்படும் கடைகளினை 06.01.2025ம் திகதி முதல் வாடகைக்கு வழங்குவதற்கான ஆகக்கூடிய ஓரே முறையில் செலுத்தக்கூடிய தொகைக்கான கேள்விகள் கீழ்க்காட்டப்பட்ட நிபந்தனைக்கு அமைவாக கேள்விகள் கோரப்படுகின்றன.
கேள்விப் படிவம் வழங்கப்படும் காலம் : 10.12.2024 – 24.12.2024 பி.ப 12.00 மணி வரை
கேள்விப்படிவம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி திகதி : 24.12.2024 பி.ப 2.00 மணிவரை
கேள்விப் படிவம் திறக்கப்படும் திகதி : 24.12.2024 பி.ப 2.00 மணிவரை
கேள்வி திறக்கப்படும் இடம் : மாந்தை கிழக்கு பிரதேச சபை
நிபந்தனைகள்
1.விண்ணப்பதாரி இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்.அத்துடன் மாந்தை கிழக்கு பிரதேச சபை எல்லைக்குள் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
2.விண்ணப்பம் பெறவரும் போது தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது செல்லுபடியான கடவுச்சீட்டு மற்றும் அதன் பிரதியுடன் வரவேண்டும்.
3.கேள்விப் பத்திரங்கள் இரு பிரதிகளில் தயாரிக்கப்பட்டு மூலப் பிரதியை “செயலாளர், மாந்தை கிழக்கு பிரதேசசபை, பாண்டியன்குளம் என்ற முகவரிக்கும் இணைப்பிரதியை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம், முல்லைத்தீவு” என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது பதிவுத் தபால் மூலமோ 24.12.2024 திகதி பிற்பகல் 2.00 மணிக்கு முன்னர் கிடைக்ககூடியதாக அனுப்பிவைத்தல் வேண்டும்.
4.ஒருவர் ஒரு கடைக்கு மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என்பதுடன் ஏற்கனவே பிரதேச சபையின் அறை வாடகை கடைகளை நீண்டகால குத்தகைக்கு பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
5.குறித்த கடையின் ஒப்பந்ததாரர்கள் எந்த வகையிலும் உப வடகைக்கு வழங்கவோ உரிமை மாற்றம் செய்யவோ முடியாது.
6.நீண்டகால குத்தகை கடைகளுக்கு மாதாந்த கடை வாடகையாக பிரதேச சபையினால் காலத்திற்கு காலம் தீர்மானிக்கப்படும் தொகையினை செலுத்தப்படல் வேண்டும்.
7.குறித்த கடைகளில் சகிக்க முடியாத தொழில்கள் அபாயகரமான தொழில்கள் ஆகிய தொழில்களை மேற்கொள்ள முடியாது.
8.தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர் மூன்று மாதகால வாடகைப்பணத்தை பாதுகாப்பு வைப்பாக ஒருவரா காலத்தில் செலுத்திப் பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்வதுடன் சபையுடன் ஓர் ஒப்பந்தமும் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் தாமாகவே இதிலிருந்து விலகியதாக கருதி அடுத்த கேள்விதாரருக்கு குறித்த நிலையம் வழங்கப்படும்.
9.கேள்விகளை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ கேள்விச்சபைக்கு பூரண அதிகாரம் உண்டு.
10.சபையால் தீர்மானிக்கப்படும் வியாபார வரி,உரிமக்கட்டணத்தினை வருடாந்தம் செலுத்தி வியாபார உரிமத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும்.
11.மேலதிக விபரங்களை அலுவலக கடமை நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
செயலாளர்
பிரதேச சபை
மாந்தை கிழக்கு
தொ.இ – 021 228 3475
செயலாளர் – 77 303 6518


