2025 ஆம் ஆண்டிற்கான முதலாம் நாள் இன்று (01.01.2025) மாந்தை கிழக்கு பிரதேச சபையின் ஆரம்பநாள் நிகழ்வு உத்தியோகபூர்வமாக
எமது சபை செயலாளர் திருமதி.பா.சிவதர்சினி அவர்களினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரதும் பங்கேற்புடன் இவ்வாண்டுக்குரிய உறுதிமொழியுடன் இன்றைய தினம் நிகழ்வானது இனிதே ஆரம்பமாகியது.
Clean Sri Lanka பிரசைகளை சத்தியப் பிரமாணம் / உறுதிமொழி
நாட்டு மக்கள் அனைவரினதும் உள்ளங்கள் புதிய எதிர்பார்ப்புகளுடன் நிரம்பியுள்ள வேளையில், நாம் 2025 ஆம் வருடத்தில் காலடி எடுத்து வைக்கின்றோம்.
நாடு என்ற ரீதியில் நாங்கள் தவறவிட்ட சகவாழ்வு, சமூக, பொருளாதார அபிவிருத்தி, நவீனத்துவம் மற்றும் கலாசார வாழ்வு என்பவற்றை மீண்டும் அடைவதே எமது எதிர்ப்பார்ப்பாகும்.
எமது நாட்டை மீளக் கட்டியெழுப்பும் சவாலுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது என்பதை நாம் நன்கு அறிவோம்.
“க்ளீன் ஸ்ரீ லங்கா” என்பது வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதற்கு அத்தியவசியமான, கூட்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றும், அத்துடன் பொறுப்புக்கூறும் தொழிற்பாடாகும். இன, மத அல்லது அரசியல் பேதமின்றி இத்தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்து செயற்படுவதற்கு உறுதிமொழி அளிக்கின்றோம்.
சகல நடவடிக்கைகளிலும், அனைத்து பிரசைகள் உயர் சமூக அந்தஸ்தை அடைவதற்கு உறுதுணையாக அமைகின்ற, ஒற்றுமை, பொறுப்புக்கூறல், சிக்கனம், வெளிப்படைத்தன்மை மற்றும் சமத்துவம் ஆகிய விடயங்களை முன்னுதாரணமாகக் கடைப்பிடிப்பதற்கும், அத்தர நியமங்களை பாதுகாத்த வண்ணம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
அபிமானம் கொண்ட இலங்கைப் பிரசைகள் என்ற வகையில் அழகானதொரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும், வளமான வாழ்க்கையை அடைவதற்கும், நேர்மையுடனும் ஒரே நோக்கத்துடனும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம் என்பதாக சத்தியப் பிரமாணம் செய்கின்றோம்./ உறுதிமொழிகின்றோம்.
மாந்தை கிழக்கு பிரதேச சபை
பாண்டியன்குளம் நட்டாங்கண்டல்









