எமது பிரதேச மக்களின் ஆரோக்கியத்தை பேணி சுகாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு எமது சபை திரவக்கழிவகற்றல் சேவையினை யும் வழங்கிவருகின்றது.
1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரிவு 93 இன் கீழ் பொதுமக்களாகிய நீங்கள் எமது சபையிலிருந்து கழிவுறிஞ்சி சேவையினை பெற்றுக் கொள்ளலாம்.
கழிப்பறைகளில் காணப்படும் மலக் கழிவுகளை அகற்றுவது இப் பணிகளின் ஒரு அம்சமாகும்.
திரவக்கழிவகற்றல் சேவைகளை தாங்கள் பின்வரும் நிபந்தனைகளுக்கமைய பெற்றுக்கொள்ள முடியும்.
1.மாந்தை கிழக்கு பிரதேச சபை எல்லைக்குள் (ஐந்து கிலோ மீற்றருக்குள் ) முதலாவது லோட் கழிவகற்றலுக்கு மட்டும் ரூபா 5000.00 கட்டணம் செலுத்த வேண்டும்.
ஒரு தடவை மாத்திரம் கழிவகற்றல் மேற்கொள்ளப்படும்.இது 3600 லீற்றர் கொள்ளளவு கொண்டமைந்துள்ளது.
2. அடுத்து வரும் ஒவ்வொரு லோட்டுக்கும் ரூபா 5000.00 கட்டணம் மேலதிகமாக செலுத்த வேண்டும்.
3.மாந்தை கிழக்கு பிரதேச சபையின் எல்லையின் 5 கிலோ மீற்றருக்கு மேலதிகமாக வரும் ஒவ்வொரு கிலோமீற்றருக்கும் ரூபா 280.00 வீதம் கட்டணம் அறவிடப்படும்.
இங்கு இரு வழிப்பாதை க்கான தூரம் தனித்தனியாக கணக்கிடப்படும்.(போகும் தூரம் தனியாகவும் வரும் தூரம் தனியாகவும் கணக்கிடப்படும்.)
4.சேவைக்கான கட்டணம் செலுத்தி பற்றுச்சீட்டு பெற்றுக்கொண்டதன் பிற்பாடு சேவைகள் வழங்கப்படும்.
பாண்டியன்குளம் நட்டாங்கண்டல்
