எமது சபை ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் ஊழியர் நலன்புரி சங்கத்தலைவர் திரு.சி.குருநீலன் அவர்களின் தலைமையில் 15.04.2025 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் 1.00 மணிக்கு எமது சபை மண்டபத்தில் சித்திரை புதுவருடத்திற்குரிய கைவிசேஷம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில் எமது பிரதேச சபை செயலாளர் திருமதி.பா.சிவதர்சினி அவர்களாலும் எமது பிரதேச சபை பிரதான முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி.ல.ருஜினா அவர்களாலும் சபையில் பணி புரியும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கைவிசேஷம் வழங்கப்பட்டதுடன் எமது தமிழ் பாரம்பரிய உணவும் செய்யப்பட்டு அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.




