2024ஆம் ஆண்டு உலக வங்கியின் உள்ளூர் அபிவிருத்தி உதவிதிட்டத்தின்(Local Development Support Project) மூலம் எமது பிரதேச உள்ளூர் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் நோக்குடனும் எமது பிரதேச மக்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் நோக்கிலும் கொல்லவிளாங்குளம் சந்தையில் புதிய கடைத்தொகுதி அமைப்பதற்கு எமது சபை செயலாளர் திருமதி.பா.சிவதர்சினி அவர்களின் நல் வழிகாட்டலின் கீழ் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டது.
குறித்த கடைத் தொகுதிகளில் உள்ள மூன்று கடைகளும் எமது சபைச்செயலாளர் நல்வழி காட்டிலும் எமது சபை வருமான பரிசோதகர் மேற்பார்வையிலும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு கேள்வி கூறல் மூலம் வழங்கப்பட்டு தற்போது இயக்கப்பட்டு மக்களுக்கு பயன்பாட்டை வழங்குவது மட்டுமன்றி சபைக்குரிய வருமானத்தையும் பெற்றுத் தருகிறது.




