எம்மால் வழங்கப்படுகின்ற சேவைகளில் ஒன்றாக நூலக சேவையும் காணப்படுகின்றது.
எம்மால் அரசு பொது நூலகங்கள், சிறுவர்க்குரிய நூலகங்கள், நடமாடும் நூலகங்கள்,இணைய வழி நூலகங்கள் என்று பல பரிமாணங்களில் மாந்தை கிழக்கு பிரதேச மக்களுக்கு நூலக சேவைகளை வழங்குகின்றது. எமது நூலகங்களில் கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், கல்வி, பொருளியல், மருத்துவம், வரலாறு, ஆன்மிகம், உளவியல், பொறியியல் போன்ற துறை சார்ந்த நூல்கள் காணப்படுகின்றன.மேலும், நாளேடுகள், பருவ இதழ்கள் போன்றவையும் காணப்படுகின்றன.
இந்த வகையில் எமது சபையினால் எமது மக்களின்,மாணவர்களின் அறிவினை வளர்க்க 3 நூலகங்கள் அமைக்கப்பட்டு நூலக சேவைகள் வழங்கப்படுகிறது.
1.மாந்தை கிழக்கு பிரதேச சபை பொது நூலகம் – பாண்டியன்குளம்
2.மாந்தை கிழக்கு பிரதேச சபை பொது நூலகம் – பாலிநகர்
3.மாந்தை கிழக்கு பிரதேச சபை பொது நூலகம் – விநாயகபுரம்
2024 ஆம் ஆண்டு தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு எமது சபைச்செயலாளர் திருமதி.பா.சிவதர்சினி அவர்கள் தலைமையில் மாணவர்கள் வாசிப்பு திறனை அதிகரிக்கும் நோக்கோடு கவிதை,பேச்சு,சித்திரம் வரைதல்,கட்டுரை,பாடல்,நாடகம் என பல போட்டிகள் நடாத்தப்பட்டு அவற்றுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்படவுள்ளது.
இந்த வகையில் 22.10.2024 ஆம் திகதி மாணவர்கள் இடையே சித்திரம் வரைதல் போட்டிகள் நடாத்தப்பட்டன.






