எமது பிரதேச மக்களின் அன்றாட வாழ்வாதார தேவைகளை நேரவிரையமின்றி இலகுவாக பூர்த்திசெய்யும் நோக்கிலும் சபையினுடைய வருமானத்தை அதிகரிக்கும் நோக்கிலும் எமது சபைச் செயலாளர் திருமதி.பா.சிவதர்சினி அவர்களின் தலைமையிலும் வழிப்படுத்தலிலும் வருமான அதிகாரி மேற்பார்வையிலும் நீண்ட காலம் இயங்கு நிலையில்லாயிருந்த பொன்னகர் சந்தை கடைத்தொகுதி நல் தொழில் முயற்சியாளர்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டு பொன்னகர், விநாயகபுரம்,பூவரசன்குளம் ஆகிய பிரதேச மக்களால் பொருட்கள் வியாபாரிகளிடம் நுகரப்பட்டு வியாபாரம் நடைபெறுகின்றது.
பொன்னகர், விநாயகபுரம்,பூவரசன்குளம் ஆகிய பிரதேச மக்கள் தற்போது நேரவிரையமின்றி இலகுவாகவும் பாதுகாப்பாகவும் தமது அன்றாட வாழ்வியல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது.
மாந்தை கிழக்கு பிரதேச சபை
பாண்டியன்குளம் நட்டாங்கண்டல்


