வீதி மின் விளக்கு
எமது பிரதேச மக்கள் பாதுகாப்பான போக்குவரத்தினை மேற்கொள்ளும் நோக்கில் எமது சபையால் வழங்கப்படுகின்ற
பொதுப்பயன்பாட்டுச்சேவைகளில் ஒன்றான வீதி மின் விளக்கு பொருத்துதல் மற்றும் வீதி மின் விளக்குகள் திருத்தம் செய்தல் சேவை காணப்படுகின்றது.
எமது பிரதேச சபை ஒவ்வொரு மாதமும் கால அட்டவணைப்படி மக்களின் கோரிக்கையை ஏற்று அவற்றின் முன்னுரிமைப்படுத்தலுக்கேற்ப எமது சபைச்செயலாளர் தலைமையில் சபை ஊழியரினால் வீதி மின்விளக்குகள் திருத்தம் செய்யப்படுகிறது.
