எமது சபையின் இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு 01.03.2024
உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகள் பொது மக்களிடம் இலகுவில் சென்றடையும் நோக்கில் நவீன தொழில்நுட்ப முறைமையை பயன்படுத்தி UNDP – CDLGஇன் நிதியின் கீழ் எமது சபைக்கு புதிய இணையத்தளம் எமது சபை உத்தியோகத்தர்கள் திரு.சி.குருநீலன் மற்றும் அ.கஜன் அவர்களினால் வட மாகாண உள்ளூராட்சி திணைக்கள உத்தியோகத்தர்கள் நல் வழி காட்டலின் கீழ் எமது சபை செயலாளர் திருமதி.பா.சிவதர்சினி அவர்களின் தலைமையில் வடிவமைக்கப்பட்டது.
உள்ளூராட்சி மன்றங்களுக்கு வடிமைக்கப்பட்ட புதிய இணையத்தளங்கள் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் 01.03.2024 இன்று 10 மணியளவில் வட மாகாண மாநாட்டு மண்டபத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
எமது சபைக்கு புதிதாக இணையத்தளம் வடிவமைத்த எமது உத்தியோகத்தர்கள் திரு.சி.குருநீலன் மற்றும் அ.கஜன் அவர்களுக்கு வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.வரதீஸ்வரன் அவர்களினால் மெச்சுரை (Commendation -230b) வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் வடக்குமாகாண பிரதமசெயலாளர்,உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்,வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள்,உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள்,உள்ளூராட்சி மன்ற இணையத்தளம் வடிவமைத்த உத்தியோகத்தர்கள் , UNDPஅமைப்பின் உத்தியோகத்தர்கள்,உள்ளூராட்சி மன்ற உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
எமது சபை இணையத்தளம் சென்று எளிமையாக எமது சேவைகளைப்பெற
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இணையத்தள முகவரியை பயன்படுத்துங்கள்.
இணையத்தள முகவரி